தற்கால கல்வி வளர்ச்சியில் பயன்கொள்வாதத்தின் பங்களிப்பு



இலங்கையின் தற்போதைய கலைத்திட்டத்தில் பயன்கொள்வாதத்தின் பங்களிப்பு

       ஆரம்ப மற்றும் இடை நிலை மாணவர்களின் இடைவிதான செயற்பாடுகளை விருத்தி செய்வதற்காக மாணவர் மன்றங்கள் நடாத்தப்படல், உயர்தரத்தில் பல்வேறு வகையான பாடத் தெரிவுகள் காணப்படுதல், மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மாத்திரமின்றி விளையாட்டுப் போட்டி, இசை, நடனம், சித்திரம், பேச்சு, வாசிப்புப் போட்டிகள், தேசிய மட்ட புத்தாக்கப் போட்டிகள், ஆங்கில தின, சிங்களப் போட்டிகள், ஒலிம்பியாட் கணித, உலக பாடசாலை செஸ் போட்டிகள் போன்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏழு அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளின் அடிப்படையில் கற்றல் - கற்பித்தலானது இடம்பெறுதல், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான செயற்திட்டங்கள் தனியாகவும், குழுவாகவும் மேற்கொள்ளப்படல். மேலும் அவர்களுக்குத் தொழிநுட்ப பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு தொழில் உலகிற்கு அவர்களைத் தயார் செய்ய NVQ3 சான்றிதழ் வழங்குதல், ICT தனிப்பாடத்துறை, கலைகளுக்கென தனிப் பல்கலைக்கழகங்கள், நுண்கலைத்துறை காணப்படுதல் இதன்மூலம் மாணவர்களின் திறன்கள் வெளிக்கொணரப்படுதல். மேலும் மகிந்தோதய, 1000 இருமொழிப்பாடசாலைகள், மாணவர் ஆசிரியர்களுக்கு TAB வழங்குதல், PLAY SCHOOL, SMART CLASS ROOM காணப்படுதல்.

 அழகியல் அலகு, கேட்போர் கூடம், தொழிநுட்ப அலகு, தொலைக் கல்வி அலகு உள்ளடங்கலாக மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் அமைக்கப்பட்டிருத்தல். E-LEARNING வசதி, கற்கும் சந்தர்ப்பங்களைப் பெறக்கூடிய SCHOOL net-தக்சலாவ, www.edupub.gov.lk போன்ற தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டங்கள் காணப்படுதல். மேலும் தகவல்தொழிநுட்ப ஆசிரியர் பரம்பரையை உருவாக்க ICDL/AL/IPICT, க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரணதரம் போன்ற தொனிப்பொருளில் ஆசிரியருக்கு பயிற்சி வழங்கல் மேலும் ஆசிரியர்களுக்கு ஜப்பான், கொரியன் மொழி பயில்வதற்கான புலமைப்பரிசில் வழங்கல், சீனமொழி கற்பதற்காக தொழிநுட்ப உதவி வழங்குவதற்கு சீனாவின் கென்பியூசியஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, தேசிய கல்வி நிறுவகம், கொரியன் மொழி டிப்ளோமா கற்கை நெறியை கொரியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவுரையின்படி ஆரம்பித்தமை, முகாமையாளர்கள் மற்றும் அதிர்பர்களுக்கு அவசியமான E-CITIZEN  பயிற்சி, இரு நகரின் நண்பர்கள், பாடசாலை சினேகம் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் மாணவ ஆசிரியர் குழுக்களை ஒன்றிணைத்தல்.  English as a life skill எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசுதல், கேட்டல் திறன் விருத்தி செய்தல். மேலும் கற்பித்தல் முறையில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுதல். 5E METHOD கற்பித்தல், FLIP CHART பயன்படுத்துதல், STOP JOT & TALK முறை, SCAVANGER HUNT கேள்வி முறை, THE CONDITION OF LEARNING எனும் 09 நிகழ்வுகளைக் கொண்ட ROBERT GANGE கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல். கற்பித்தலில் AUDIO, VEDIO போன்ற உண்மை மாதிரிகளைப் பயன்படுத்துதல். கற்பிக்கும் சாதனமாக கட்புல பொருட்களைப் பயன்படுத்துதல். அவற்றுள் எறியா நிலைக்கட்புலப் பொருட்களாக: வரைபடம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், தேசப்படம், புகைப்படம் என்பனவும், எறிநிலைக்கட்புலப் பொருட்களாக: POWERPOINT எடுத்துரைப்பு போன்றனவும் விளங்குகின்றன. மேலும் மாணவர்களிடத்தில் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளையும் நேர நடத்தைகளையும் அவர்களிடத்தில் கட்டியெழுப்பும் நோக்குடன்  KAS மாதிரிகை பயன்படுத்தப்படுகின்றது. ஆசிய சிறுவர் சித்திரப் போட்டியில் (2013 ஜப்பான்) 24 நாடுகளின் 70,899 படைப்புகளுக்கிடையில் 08 வெற்றிகளும், உலக பாடசாலை செஸ் போட்டி (2013 கிரிஸ்) முதல் தடவையாக இலங்கை பதக்கம் வென்றது, கணாகாவ இரு-வருடாந்த சித்திர போட்டியில் (2013ஜப்பான்) 91 நாடுகளின் 24000 படைப்புக்களில் 19 வெற்றிகளும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றன. இவ்வாறான பல வெற்றிகள் பயன்பாட்டுவாதத்தின் நோக்கத்தினைப் பூர்த்தி செய்வதாக அமைகின்றது. இவ்வாறாக பயன்பாட்டுவாத்தின் அடிப்படையில் இலங்கையின் கல்வியில் காணப்படுகின்ற பல நடைமுறைகளைக் கூறிக்கொண்டே போகலாம் (சாம்பவி, 2020). 

2.5 இலங்கையின கல்வி முறைமையும் பயன்பாட்டு வாதமும்

இலங்கையின் கல்வி திட்டமானது ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி என வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆரம்பக்கல்வி நிலை தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புகளைக் கொண்டதாக அமைகின்றது. தரம் ஐந்து வயது தொடக்கம் தரம் 11 வயது வரையிலான பருவத்தினர் இக் கல்வியை கற்கின்றனர். தரம் ஆறு தொடக்கம் தரம் பதினொன்று வரை இரண்டாம் நிலை கல்வியாகவும் ஐந்தாண்டுகளை கொண்ட ஆரம்ப கல்விப்புலம் கலைத்திட்ட விரிவாக்கத்தினதும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளினதும் வசதி கருதி முதன்மைனிலை ஒன்று தரம் ஒன்றும் தரம் இரண்டும், முதன்மை நிலை இரண்டு தரம் மூன்றும் தரம் நான்கும், முதன்மை நிலை மூன்று தரம் ஐந்து என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. 

அ. ஆரம்பக்கல்வி

ஜோன் டூயி தனது இலட்சிய பள்ளியில் முதல் நிலையில் பிள்ளை தன் குறுகிய எல்லை கொண்ட வீட்டு வாழ்க்கையில் இருந்து வருகிறது. வீட்டில் வாழ்வையும் வேலைகளையும் அறிந்து பின் விரிவான சமூக வாழ்க்கை பற்றி அறிகிறது. கடைசி ஆண்டில் சிறிது எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொள்கிறது. அதனை ஒட்டியே எமது நாட்டுக் கல்விக் கொள்கையும் காணப்படுகிறது.

திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள், செயற்பாடுகள், எழுத்து வேலைகள் என்று மூன்று பிரதான பகுதிகளின் ஊடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. முதன்மை நிலை ஒன்றில் திட்டமிடப்பட்ட விளையாட்டுக்களும் செயற்பாடுகளும் அதிக அளவிலும் எழுத்து வேலைகள் குறைந்த அளவில் இருத்தலிலும் கவனஞ் செலுத்தப்படுகின்றது.  முதன்மை நிலை இரண்டில் மூன்று பகுதிகளும் சமமாக அமையும். முதன்மை நிலை மூன்றில் குறைந்த அளவிலான திட்டமிடப்பட்ட விளையாட்டுக்களுடன் கற்பித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் (பொது கல்வி சீர்திருத்தம், 1997). ஆரம்ப வகுப்பு கலைத்திட்டத்தை நோக்கும் போது பாடவிடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுயசிந்தனை குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல் சிந்தனை வெளிப்பாடு போன்றவற்றிற்க்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது இதற்காக அனுபவங்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்குதல், கதை கூறுதல், கேட்டல், இசையும் அசைவும், நாடகம், விளையாட்டும் அசைவியக்க செயற்பாடுகளும், சேகரித்தலும் வகை பிரித்தலும், கணக்கிடுதல், கட்டியெழுப்புதல், மாதிரிகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு கலைத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  

மேலும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் வழங்குகின்றது. அதாவது மாணவர்கள் தாமாகவே சுற்றாடலை இனங்கண்டு அதற்கேற்ப இசைவாக்கம் அடைந்து சூழலுடன் தொடர்புபடுவர். அவர்கள் தாமாகவே சூழலை இனம் கண்டு கொள்வதற்கான ஆற்றலை பெறுகின்றனர். அவர்களாகவே சூழலின் தன்மைகளை உணர்ந்து கொள்வர்.  மேலும் தரம் 01-05 வரையான வகுப்பறைகளில் கணனி மூலை, செயற்பாட்டு மூலை, வாசிப்பு மூலை, உணவு மூலை காணப்படுதலும் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். இவையனைத்தும் மாணவர்களின் அனுபவத்தினூடாக கற்றலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாகும். இவையனைத்தும் பயனளவை கொள்கையின் வெளிப்பாடாகவே கருத முடியும்.

ஆ இடைநிலைக் கல்வி

ஜோன் டூயியின் கருத்துப்படி பிள்ளைகள் இரண்டாவது நிலை அதாவது இடைநிலையிலேயே பல்வேறு வகைத் திறமைகளைப்  பெற்றுக்கொள்ளும். வரலாற்றின் வெவ்வேறு கலைகளில் நிபந்தனைகளின் படி மனித நோக்கங்கள் உணரப்பட்டதை பிள்ளை இங்கு கற்றுக் கொள்ளும். இதற்கமையவே இடைநிலை கல்வியில் கணிதம் விஞ்ஞானம் அழகியல் புவியியல் ஆகிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு வாழ்க்கைக்கு தேவையானவற்றை பல்வேறு வகையான திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கலைத்திட்டம் அமைந்துள்ளது. இடைநிலை மாணவர்களின் இடைவிதான செயற்பாடுகளை விருத்தி செய்வதன் நோக்கில் மாணவர் மன்றங்கள் நடத்தப்படல், வெளிக்கள சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்லல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுதல், இசை, நடனம், சித்திரம், பேச்சு, வாசிப்புப் போட்டிகள், தேசியமட்ட புத்தாக்கப் போட்டிகள், ஆங்கில தின, சிங்கள போட்டிகள், ஒலிம்பியாட் கணித, உலக பாடசாலை செஸ் போட்டிகள் போன்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்களின் அபிவிருத்தியையும் பல வகையான வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களையும் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பயன்பாட்டு வாதம் கல்வியில் சோதனை மற்றும் அவதானிப்புக்கு வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. நடைமுறைச் சிக்கல்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் தேவை என்பதை இந்த அணுகுமுறை பெரிதும் அங்கீகரிக்கிறது. மேலும் தீர்வுகள் பலனளிக்கும் வகையில் பெரும்பாலும் பரிசோதனை மற்றும் அவதானிப்புகள் தேவைப்படுகின்றன. எனவே பயன்பாட்டுவாதம் கல்வியில் பரிசோதனை மற்றும் அவதானிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அத்துடன் கருதுகோள்களை சோதிப்பதற்கும் நடைமுறை தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஒரு வழிமுறையாக இது அமைகிறது. 

இ. உயர்நிலை கல்வி

பாடசாலை மட்டத்தில் உயர்நிலை கல்வியெனும் போது தரம் 12 மற்றும் தரம் 13 இனை குறிக்கும். இம்மட்டத்திலும் கல்வியின் வளர்ச்சிக்கு பயனளவு கொள்கை பாரிய பங்களிப்பினை வழங்குவதினை அவதானிக்க முடிகிறது. இதற்கு உதாரணங்களாக பாடத்தெரிவுகள் காணப்படுகின்றமை (கலை, வர்த்தக, விஞ்ஞான, கணித மற்றும் தொழிற்கல்வி பாடங்கள்), தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தியமை, 13 வருட உத்தரவாத கல்வியினை வழங்குதல் மற்றும் தனியாள், குழு செயற்திட்டங்கள் போன்றவற்றினை குறிப்பிட முடியும். 

தனியாள், குழு செயற்திட்டங்கள்: நடைமுறையில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைக்குக் கற்றல் செயல்முறையில் நடுவிடம் தந்து அதனைத் தீர்ப்பதன் விளைவாக அறிவு, செயல்திறன்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை இணைந்த முறையில் குழந்தைகளை பெறச் செய்வது செயற்திட்டம் முறையாகும். நடைமுறைப் பயன்கள் விளைவிக்கும் சிந்தனையினையும் முயற்சியினையும் மாணாக்கரிடையே தோற்றுவிக்க உதவக்கூடிய, அம்மாணாக்கர்களால் தாமாகவே மேற்கொள்ளப்பட்ட செயல்களைச் செயல்திட்டங்கள் எனலாம். செயல்திட்டங்களைத் திட்டமிடவும் செயற்படுத்தவும் இறுதியில் இவற்றை மதிப்பிடவும் வழிகாட்டித் துணை செய்வது ஆசிரியரது முக்கிய பணியாகும் எனப்படுகிறது. 

பள்ளியில் மேற்கொள்ளப்படும் செயல்கள் வெளியுலக வாழ்க்கையில் காணப்படும் உண்மை நிலைமைச் செயல்களைப் போன்று காணப்பட வேண்டுமென்பதும், இவற்றைச் செய்து முடிப்பதில் மாணாக்கர்கள் உண்மையான ஆர்வத்துடன் காணப்பட வேண்டுமென்பதும், செயல்திட்ட முறையின் அடிப்படைகளாகும்;. செயல்திட்டங்கள் தனிப்பட்டோர்க்கானவையாகவோ அல்லது சமூகத் தொடர்புடையவையாகவோ இருக்கக்கூடும். பிந்திய வகைச் செயல்திட்டங்களைச் சமூகவியல்பான செயல்கள் எல்லாம். இவை தனிப்பட்டோர்க்கான செயல்திட்டங்களைக் காட்டிலும் அதிகப்பயனுள்ளவையாகும். 

சமூகப்பண்புகள், குடிமைப்பண்புகள் ஆகியன வளர இவை பெரிதும் துணை செய்வனவாகும். கல்வியின் தொடக்கநிலைகளில் விளையாட்டின் அடிப்படையில் பயனுள்ள பல செயல்திட்டங்களைக் குழந்தைகளால் எடுத்து முடிக்கவியலும். ஆனால், கல்வியின் உயர்நிலைக் கட்டத்தில் போதிய கல்விப்பயனுள்;ள செயல் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவது அவ்வளவு எளிதன்று என்பதனைச் செயல்திட்ட முறையினை முழுமையாக ஆதரிப்போரும் ஒப்புக்கொள்கின்றனர்.

13 வருட உத்தரவாத கல்வி: அனைத்து மாணவர்களுக்குமான கடைநிலை கல்வித்தகுதியினை உயர்தரத்துக்கு இணையாக்கும் நோக்கில் கல்வியமைச்சின் மூலம் 2017 ஆம் ஆண்டு பரிசோதனை செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம் 2019 ஆம் ஆண்டுமுதல் உத்தியோகப்பூர்வ கல்விச்செயல்திட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தரம் 1 முதல் தரம் 13 வரை எச்சந்தர்ப்பதிலும் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விகுவதை தவிர்த்து குறித்த மாணவர்களுக்கு தொழில்;க்கல்வியினை வழங்கும் செயற்றிட்டமாக 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. திறன்களை வளர்த்தல் மற்றும் அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாத்தல் என்ற அனைவருக்கும் கல்வி வழங்கும் தேசிய கொள்கைக்கு அமைவாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாமையினால் பாடசாலை கல்வியினை விட்டு இடைவிலகும் மாணவர்களினால் அதிகரிக்கும் சிறுவர் குற்றங்களை தடுத்தல் மற்றும் மாணவர்களை 

உயர்தரத்தில் உள்ள மற்றைய பாடத்துறைகளைப் போன்று இப்பாடத்துறையும் இரண்டு வருட காலத்தினை கொண்டதாகும். குறித்த பாடதுறையில் சித்தியடையும் மாணவர்களுக்கு NVQ LEVEL 4 சான்றிதழ் மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவின The university of vocational technology  (UNIVOTEC) மூலமாக வழங்கப்படும். மேலும் NAITA மூலமாக மாணவர்களின் JOB TRAINING மேற்பார்வை செய்யப்பட்டு ON THE JOB TRAINING சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கல்வியமைச்சினால் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டத்தில் கல்வி கற்றமைக்கான கல்வியமைச்சின் சான்றிதழும் வழங்கப்படும்.

கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தர தொழில்நுட்பத் துறையினது அறிமுகமானது: இலங்கையின் பொதுக்கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள கல்விப்பொதுதராதர உயர்தரக் கலைத்திட்டத்திலுள்ள கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய நான்கு பாடத்துறைகளுக்கு மேலதிகமாக தொழில்நுட்பவியல் (TECHNOLOGY) என்னும் பாடத்துறை 2013 ஆம் ஆண்டு தொடக்கம் புதிதாக பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தொழில்நுட்பக் கல்வியின் அறிமுகமானது வேலையுலகிற்கும் தொழில்நுட்ப உலகிற்கும் அறிமுகத்தைத் தருவதுடன் கல்விப்புலத்தையும் விரிவுபடுத்த உதவுவதாக அமையும். இதன் விளைவானது கற்றல் சாதனங்கள், கருவிகள் உத்திகள் மற்றும் உற்பத்தி படிமுறைகள், பகிர்வு, முழுமையான முகாமைத்துவம் என்பவற்றை தேடியாய்வதாக அமைவதோடு செயன்முறை அனுபவங்கள் மூலமாகக் கற்றல் செயன்முறைகளைப் பெறுமதிமிக்கதாக்குகிறது. இலங்கையின் பொதுக் கல்வியின் ஒரு மைல்கல்லான தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள உயர்தர தொழில்நுட்பத் துறையை அடையாளங் காணமுடியும். ஏனெனில், இது உயர்தரத்தில் கலைத்துறையைத் தெரிவுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அத்துடன் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்துறை மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொழில்நுட்பத் திறன் கொண்ட மாணவர்கள் பட்டதாரிகளாகும் போது, நாட்டின் பொருளாதார மற்றும் சமூகம் சார்ந்த அபிவிருத்திக்கு அவர்களால் ஆக்கத்திறனுடன் வினைத்திறன்மிக்க பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருக்கும். கோட்பாட்டு அறிவு ரீதியாக மட்டுமன்றி க.பொ.த உயர்தரத்தில் பயிலும் இலங்கை மாணவர்கள் செயன்முறை ரீதியான அறிவை பெற்றுக் கொள்வதில் இத்தொழில்நுட்பப் பாடத்துறையின் அறிமுகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது (நித்திலவாணன், 2020). 

2.6 முடிவுரை

ஜோன் டூயியின் பயன்கொள்வாதமானது கல்வி வளர்ச்சியில் பாரிய அளவிலான பங்களிப்பினை வழங்கியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 'கற்கக் கூடிய மாணவர்களைக் கொண்ட பாடசாலை முறைமையில் ஆய்வு மற்றும் நவீனதொழிநுட்பத்துடன், பொருத்தமான பயிற்றப்பட்ட தேர்ச்சி மிக்க ஆசிரியர்கள் மற்றும் புத்தாக்க கலைத் திட்டத்திடனுமாக அதி நவீன கல்வியை இலங்கை பாடசாலை முறைமையிலுள்ள மாணவர்களுக்கு வழங்குதல்' என்ற தேசிய கல்வி நிறுவனத்தின் பணிக்கூற்றும் பயன்பாட்டுவாதத்தினையே எடுத்துரைக்கின்றது. அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக் கற்றல், வாழக் கற்றல், இணைந்து வாழக்கற்றல் எனும் Unesco இன் நான்கு அடிப்படைக் கருத்துக்களும் பயன்பாட்டுவாதத்தினையே வலியுறுத்துகின்றன. நாம் கற்கின்றோம் என்று கூறுவதை விட நாம் அனுபவம் பெறுகின்றோம் என்று கூறுவதுதான் சிறந்த கல்வி ஆகும். எனவே கல்வி ஆனது அனுபவங்களை, அனுபவங்களால், அனுபவங்களினூடாக வழங்குவதாக அமைய வேண்டும் என பயன்பாட்டுவாதம் விளக்கி நிற்கின்றது. எந்த நாடு பயன்பாட்டுவாதத்தை பின்பற்றுகின்றதோ, அந்நாட்டினால் நவீன எதிர்கால சவால்களுக்கு உறுதியாக முகங்கொடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை


Post a Comment

0 Comments