தத்துவம் - அறிமுகம்



 இவ்வுலகம், மனித வாழ்க்கை ஆகியவை தொடர்பான ஒருவரது தனிப்பட்ட கண்ணோட்டமே தத்துவம் என கூறலாம். எதையும் பகுத்தறிந்து புதுமைப்படுத்த முயலும் ஆழ் சிந்தனை முறையே தத்துவமாகும். தத்துவத்தினை குறித்து ஓர் வரையறையுனுள் வரையறுக்க முடியாது.

‘தத்துவம்’ (PHILOSOPHY) என்ற சொல், வேட்கை (LONE) என்னும் பொருள்படும். “பிலியன்” (PHILLION) மற்றும் அறிவு என்று பொருள்படும், “சோபியா” (SOPHIA) என்ற இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்ததாகும், எனவே தத்துவம் என்பதன் பொருள் “அறிவு வேட்கை” (LOVE FOR WISHDOM) ஆகும். காலத்திற்கு காலம் வந்த பல்வேறு தத்துவவியலாளர்களும் தத்துவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர். இயற்கை பற்றி ஒரு விரிந்த பார்வையை பெற்றிட முயற்சித்தல் அதாவது பொருட்களின் உண்மை தன்மையை பற்றி அனைவரும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் விளக்கமளிக்க முற்படுவதே தத்துவம் ஆகும். தமக்கு நன்கு தெரிந்த பொருட்களை கூட அவர் ஆராய்ந்து மீள நோக்குதலே தத்துவம் என ‘ஜோன் டூயி’ குறிப்பிட்டுள்ளார். எனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ள தத்துவத்திற்கும், செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்ந்தோமானால் பல்வேறு விளக்கங்களை பெறமுடியும். 

தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர் மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும் சீனர்களும் செருமானியர்களும் கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக அடிப்படையாகச் சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். 

மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (pholosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கைஇ இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும். தத்துவம் என்பது முழுமையான அறிவியல் சிந்தனையின் தொகுப்பேயாம். தத்துவம் மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்று உண்மைகள், மெய்ம்மைகள் பற்றிய அறிவினைக் கொடுக்கின்றது. தத்துவம் உயிரை இயக்கும் சக்தியாகக் கருதப்படுகின்றது.

தத்துவம் தொடர்பாக தத்துவவியலாளர்களின் கருத்துக்கள்

தத்துவத்தை ஆழமாக கற்கும் போது அதனூடாக வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்ற அறிவு தோன்றுகிறது.                          (John Dewey)                 

வாழ்க்கைக்கு தேவையான நம்பிக்கை, விருப்பங்கள், மனப்பாங்கு என்பவற்றை ஒழுங்கான முறையில் விளங்கிக் கொள்வதற்கு முயற்சிடுத்தல் தத்துவ செயன்முறையாகும்.                                            (John wilson)

தத்துவம் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுடன் வாழ்க்கைக்குரிய திட்ட முறைகளையும் பெற்றுக் கொள்கிறது.                    (S. Rathakrishnan)

தத்துவம் கோட்பாடு அல்ல. அது செயற்பாடாகும். (Vidkanstain)

தத்துவம் என்பது பகுப்பாய்வுசார்

செயன்முறையாகும் (R. S. Peters)

தத்துவம் என்பது உண்மையை உணர முயலும் ஒன்று (Pileto)



Post a Comment

0 Comments