கல்வி தத்துவம்

  


கல்வி

கல்வி என்ற எண்ணக்கருவானது காலத்துக்கு காலம் விருத்தி அடைந்துள்ளது. இவ்வண்ணக்கருக்குள் நிலையான அம்சங்கள் இருந்தாலும் அடிக்கடி புதுக்கேள்விகள், புதுதேவைகள், புதுச்சந்தர்ப்பங்கள் என்பவற்றிற்கேற்ப அவை மாற்றமடைந்துள்ளன. கல்வி என்பது சிக்கலான ஒரு எண்ணக்கரு அது செயன்முறை சமுதாயமொன்றை உள்ளடக்கியுள்ளது. அது நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்துக்கு கலாச்சாரம், காலத்துக்கு காலம் மாறுகின்றது. பல்வேறு சிந்தனையாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியல் அறிஞர்கள் என்போர் பல்வேறு வகையில் கல்வி என்ற எண்ணக்கருவை வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். இவற்றில் சில ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. (மனோகரன், 2011)

கல்வியும் தத்துவமும்

தத்துவம் கல்வி ஆகிய இரண்டும், ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை என தத்துவவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கல்வியும் தத்துவமும் நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகுமென  W.D Rose  வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே கல்வித்தகுதி உருவாக்கப்பட வேண்டுமென  J.A Bourner உம் கூறியுள்ளதாக கல்வித் தத்துவமும் கல்விச் சமூகவியலும் எனும் நூலில் மனோகரன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தத்துவத்திற்கும் கல்விக்கும் இடையிலான தொடர்பினை பல்வேறு கல்வியலாளர்கள், தத்துவவியலாளர்களின் கருத்துக்களை பார்க்கும்போது உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இலக்குகளையும் நோக்கங்களையும் கல்வி செயல்முறைகளில் தீர்மானிப்பது தத்துவமே. செயலையே கருவாகக் உட்பொருள் அல்லது அடிப்படைக் கொண்ட கல்வி, தான் செயல்பட வேண்டிய இலக்கினை தேடும் போது, தத்துவமானது அதற்கு அமைய அத்திசையை சுட்டிக்காட்டுவதுடன், வளர்க்க வேண்டிய முறைகளையும் விளக்குகிறது. “இயக்கமற்ற நிலையிலுள்ள தத்துவம், இயக்கம் பெரும்போது கல்வியாகின்றது” எனவே ஒரு தொடர் செயலின், இரு கூறுகளாக அமைந்துள்ளன. ஒரு செயலுக்குத் துவக்கமும் தொடர்ச்சியும் இன்றியமையாதவை. ஆக தத்துவமும் கல்வியும், துவக்கமும் தொடர்ச்சியுமாக அமைந்து செயல்படுகின்றன.

தத்துவத்தில் முக்கிய அம்சமான பௌதீகவதீத எனும் பிரிவில் அறிவாய்வு ஒழுக்கம் மற்றும் யதார்த்தத்தின் தன்மை என்பன ஆராயப்படுகிறது. இதனை நாம் கல்வியின் அம்சங்களிலும் செல்வாக்கு செலுத்துவதை நோக்கும்போது, தத்துவம் மற்றும் கல்வி தத்துவத்தின் இடையிலான தொடர்பினை நாம் கண்டு கொள்ளலாம். மேலும் தத்துவத்தில் அடங்கியுள்ள நல்லொழுக்கம் எனும் அம்சமானது கல்வி தத்துவத்தின் விசேட செயலாக்கை செலுத்துகிறது. அதாவது கல்வி தத்துவத்தில் பாடவிதான உள்ளடக்கம், கற்பித்தல் முறைகளை கையாளுதல், வகுப்பறையில் ஒழுக்க கட்டுப்பாடுகள் என்பவற்றின் மீது மேற்கூறப்பட்ட ஒழுக்கவியலின் அம்சங்கள் செல்வாக் செலுத்துகின்றது.

அத்துடன் அக்ராவெல்லின்  எனும் அறிஞரின் கருத்து இதனை மெய்ப்பிக்கின்றது. தத்துவம் இன்றிய கல்வி குருட்டுத்தனமான பயிற்சி எனவும் கல்வி இல்லாத தத்துவம் பெருமதியற்றது எனவும் இவர் எடுத்துக்காட்டுகிறார்இக்கூற்றுக்கமைய கல்வி எனும் அம்சம் வெற்றியடைய தத்துவத்தின் தொடர்பு அவசியமாகிறது. மேலும் முன்கூட்டியே தீர்மானங்களை மேற்கொண்டு பிள்ளையை விருத்தி செய்வதற்காக தத்துவ பின்னணியை தயார் செய்தலும் அதனை மதிப்பிடலுமே தத்துவத்தின் தொழிற்பாடாகும். இதனையே கல்வியில் பல பிள்ளைகளின் விருத்தி கட்டங்களை கவனத்தில் கொண்டு அறிவாற்றல், உடல், மனவெழுச்சி மற்றும் நற்பண்புகளின் விருத்திக்கு சரியான முறையில் வழிகாட்டல் நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிட்டுதான் நடைமுறைப்படுத்துவதை கல்வியில் நாம் அவதானிக்கலாம் .பொதுவாக தத்துவஞானிகள் தத்துவத்தில் அறிவின் தோற்றம் ஒழுக்கம் சார் பிரச்சனைகள் ஒழுக்கவியல் போன்ற அம்சங்களை பற்றி பேசுகின்றனர். மேற்கூறப்பட்ட இதேஅம்சங்களை நாம் கல்வி தத்துவத்திலும் காணலாம். எல்லா தத்துவங்களிலும் அவற்றிற்க்கே உரித்தான அறிவின் தன்மையும் அறிவைப் பெரும் முறைகளையும் ஆராயப்படுகின்றது. இவ்வாறே கல்வியின் தத்துவத்திலும் கல்வியைப் பெரும் முறைகளும், கல்வியின் தன்மை என்பன பற்றியும் ஆராயப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்தில் தத்துவமும் கல்வியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டதாக இருப்பதுடன் கல்வியில் பிரயோகிக்கப்படும் பல்வேறு அம்சங்கள் தத்துவத்தின் அம்சங்களில் இணங்கிப் போவதையும் அவதானிக்கலாம்.




Post a Comment

0 Comments